Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
நீங்க செய்யுற பாகற்காய் கசப்பா இருக்குமா? அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.. கசப்பே இருக்காது..
Karela Cashew Varuval Recipe: கசப்புச் சுவையுடைய பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நல்லது. பாகற்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள புழுக்கள் அழிவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
உங்கள் வீட்டில் பாகற்காய் உள்ளதா? பாகற்காயை நீங்கள் எப்போது சமைத்தாலும் கசப்பாகத் தான் இருக்குமா? இதனாலேயே உங்கள் வீட்டில் உள்ளோர் பாகற்காயை சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் இன்று கசப்புச்சுவை தெரியாத அளவில் பாகற்காய் முந்திரி வறுவலை செய்யுங்கள்.

இந்த வறுவல் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இந்த மாதிரி பாகற்காயை சமைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு பாகற்காய் முந்திரி வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் முந்திரி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாகற்காய் - 2
* உருளைக்கிழங்கு - 1
* முந்திரி - 15
* வரளிகாய் - 1
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாகற்காயின் மேற்தோலை சீவி நீக்கிவிட்டு, அதில் உள்ள
விதைகளை நீக்கிவிட்டு, அதை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் துண்டுகளாக்கப்பட்ட பாகற்காயை உப்பு கலந்த நீரில் போட்டு 30
நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள கசப்புத்தன்மை
குறையும். 30 நிமிடம் கழித்து நீரை வடிகட்டிவிட்டு, பாகற்காயை ஒரு
துணியில் போட்டு உலர்த்த வேண்டும்.
* அதன் பின் உருளைக்கிழங்கின் தோலை நீக்கவிட்டு, அதையும் நீளத்
துண்டுகளாக வெட்டி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மிதமான
தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின்பு அதில் பாகற்காய் துண்டுகுளை சேர்த்து, அதையும் சற்று
பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்ததும், வரமிளகாய், பச்சை
மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, முந்திரியையும் சேர்த்து
குறைவான தீயில் வைத்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வறுக்க
வேண்டும்.
* பின்பு வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பாகற்காயை
சேர்த்து கிளறி, அத்துடன் மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள்,
மாங்காய் தூள், சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் எள்ளு விதைகள் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து
நன்கு கிளறி இறக்கினால், சுவையான பாகற்காய் முந்திரி வறுவல்
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











