Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
இட்லி, தோசைக்கு ஏற்ற காரைக்குடி ஸ்பெஷல் வெங்காய கொசமல்லியை எப்படி செய்யணும் தெரியுமா?
Karaikudi Special Vengaya Kosamalli Recipe In Tamil: காலையில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு ஒரு காரைக்குடி சைடுடிஷ்ஷை செய்யுங்கள். அது தான் காரைக்குடி வெங்காய கொசமல்லி. இது இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சட்டென்று 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.
உங்களுக்கு காரைக்குடி ஸ்பெஷல் வெங்காய கொசமல்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி ஸ்பெஷல் வெங்காய கொசமல்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கல்பாசி - 1 துண்டு
* பட்டை - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 1
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 கைப்பிடி
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கல்பாசி, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி
வதங்குவதற்குள் அரைக்க வேண்டியதை அரைத்துக் கொள்ளலாம்.
* அதற்கு மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா,
வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து
பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்த்து, 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான வெங்காய கொசமல்லி தயார்.
Image Courtesy: Pinterest



Click it and Unblock the Notifications
