Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
தக்காளி விலை அதிகமா இருக்குற இந்த நேரத்துல எப்படி தக்காளி சேர்க்காம கார சட்னி செய்றதுன்று பாருங்க...
Kara Chutney Without Tomato In Tamil: தக்காளி விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சமையலில் அதிக தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது என்று பலரும் இணையத்தில் ரெசிபிக்களை தேடிக் கொண்டிருப்பார்கள்.
நீங்களும் அப்படி தேடுகிறீர்களா? அதுவும் இட்லி, தோசைக்கு தக்காளி சேர்க்காமல் எப்படி சட்னி செய்வதென்று தேடுகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. இப்படி தக்காளி சேர்க்காமல் சட்னி செய்தாலும், அந்த சட்னி சுவையாகத் தான் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி சேர்க்காமல் ஒரு அட்டகாசமான கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 15 பல்
* வரமிளகாய் - 5
* பெரிய வெங்காயம் - 3
* புதினா - 1/2 கைப்பிடி
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதகக் வேண்டும்.
* அடுத்து அதில் புதினா சேர்த்து லேசா சுருங்கும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொட்டுக்கடலை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி இல்லாத கார
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications