Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
கலக்கலான காந்தாரி சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு செம சைடிஷா இருக்கும்...!
Kanthari Chicken Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு சிக்கனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சிக்கனை வைத்து வித்தியாசமான சிக்கன் சைடிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த காந்தாரி சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த காந்தாரி சிக்கன் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, புரோட்டோ, தோசை மற்றும் நெய் சோறு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். தேங்காய்ப்பால், முந்திரி போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த காந்தாரி சிக்கன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த காந்தாரி சிக்கன் கிரேவியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு காந்தாரி சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காந்தாரி சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 1 கப், பொடியாக நறுக்கியது
- இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- காந்தாரி மிளகாய் - 10
- தக்காளி - 1, பொடியாக நறுக்கியது
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்
- மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
- கரம் மசாலா - அரை ஸ்பூன்
- வெந்நீர் - அரை கப்
- முந்திரி - 10 ( வெந்நீரில் ஊறவைத்து அரைத்தது)
- கெட்டியான தேங்காய்ப்பால் - 1/4 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், 3 காந்தாரி மிளகாய், உப்பு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, உடைத்த காந்தாரி மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் சமைக்கவும்.
- நறுக்கிய தக்காளியைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் மென்மையாக மாறும் வரை சமைக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
- பின்னர் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறவும். அடிக்கடி கிளறிவிட்டு 5 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் வெந்நீரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை மூடி வைத்து, சிக்கன் வேகும் வரை வேக வைக்கவும், அவ்வப்போது கிளறிவிட்டு சமைக்கவும். பின்னர் கரம் மசாலா தூள் மற்றும் அரைத்த முந்திரி விழுதைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
- இறுதியாக கெட்டியான தேங்காய்ப் பால் மற்றும் சில கறிவேப்பிலைகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, உப்பு சரிபார்க்கவும். குறைந்த தீயில் 2 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்தால் சுவையான காந்தாரி சிக்கன் குருமா ரெடி.
- இது சப்பாத்தி, தோசை, ஆப்பம் போன்றவற்றுடன் சாப்பிடும் மிகவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications