Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
மொறுமொறுப்பான.. காஞ்சிபுரம் ரவா மசாலா தோசையை எப்படி செய்யணும் தெரியுமா?
Kanchipuram Rava Masala Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி ரவா தோசை செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை ரவா தோசையை செய்வதாக இருந்தால், காஞ்சிபுரம் ரவா மசாலா தோசையை செய்யுங்கள்.
இந்த ரவா மசாலா தோசை நன்கு மொறுமொறுவென்றும், சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு காஞ்சிபுரம் ரவா மசாலா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஞ்சிபுரம் ரவா மசாலா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* அரிசி மாவு - 3/4 கப்
* மைதா - 3/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப்
சட்னிக்கு...
* வரமிளகாய் - 6 (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 5 பல்
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொண்டு, அத்துடன்
அரிசி மாவு, மைதா மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 5 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து, மூடி
வைத்து 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் நீரில் ஊற வைத்த வரமிளகாய், புளி, பூண்டு,
மல்லி விதை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை கரண்டியால் நன்கு கிளறி, மாவை அள்ளி தோசைக்கல்லில்
ஊற்றி, தோசை ஓரளவு வெந்ததும், அதன் நடுவே அரைத்த சட்னியை சிறிது
வைத்து பரப்பி, பின் அதன் மேலே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து
மடித்து, பரிமாறினால் சுவையான காஞ்சிபுரம் ரவா மசாலா தோசை தயார்.
Image Courtesy: Wellcurve



Click it and Unblock the Notifications








