Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும்... கம்பு வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்யணும் தெரியுமா?
Kambu Vegetables Kanji Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் கம்பு இருந்தால், அதைக் கொண்டு வெஜிடேபிள் கஞ்சியை செய்யுங்கள்.
இன்று அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் ஆரம்பமாகிறது. வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கம்பு கஞ்சி பெரிதும் உதவி புரியும். முக்கியமாக இது காலையில் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும் கம்பு வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கம்பு வேக வைப்பதற்கு...
* கம்பு - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
கஞ்சிக்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய கம்பை மிக்சர் ஜாரில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த கம்பை குக்கரில் போட்டு, அத்துடன் 3 கப் நீரை ஊற்றி,
1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெங்காயத்தை
சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு
சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதற்கு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், கொத்தமல்லியை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, கொதித்துக்
கொண்டிருக்கும் கம்புடன் சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான கம்பு வெஜிடேபிள் கஞ்சி தயார்.
Image Courtesy: Traditional Food Tamil



Click it and Unblock the Notifications