Latest Updates
-
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை கனவில் பார்க்கிறார்களா? கனவு சாஸ்திரத்தின் படி அதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்! -
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தமிழ்நாட்டிலேயே மிகவும் பழமையான நகரம் எது தெரியுமா? எதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்.. -
உலக வரைபடத்திலேயே இல்லாத 7 நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளுக்கு தனி இராணுவம், கரன்சி கூட இருக்காம்
தினமும் இட்லி தோசைக்கு பதிலா 1 கப் கம்பு மாவு இருந்தா 10 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க..
Kambu Adai Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி தோசை என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்களா? அப்படியானால் கோடை வெயிலுக்கு இதமாகவும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரும் வகையில் கம்பு கொண்டு ஒரு அசத்தலான காலை உணவை செய்யுங்கள். அது தான் கம்பு அடை.
இந்த கம்பு அடைக்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். ஒருவேளை சைடு டிஷ் வேண்டுமானால், கார சட்னி, தக்காளி சட்னி போன்றவை நன்றாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கம்பு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 1 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன் (லேசாக பொடித்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை
மிளகாய், சீரகம், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரில் கழுவிய
முருங்கைக்கீரையை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்னர அத்துடன் சீரகம், கரம் மசாலாத் தூள், தயிர், பொடித்த மிளகு
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் கம்பு மாவு மற்றும் கோதுமை மாவை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, பிசைந்த மாவை ஒருமுறை
பிசைந்து, சிறிது எடுத்து உருண்டையாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, இந்த உருண்டையை வைத்து நன்கு மெல்லிசாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
எண்ணெய் சிறிது ஊற்றி தட்டி வைத்துள்ளதை போட்டு மிதமான தீயில் வைத்து,
எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால்,
சுவையான கம்பு அடை தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
