Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
10 நாள் வரை கெட்டுப்போகாத சுவையான கல்யாண வீட்டு வத்த குழம்பு ரெசிபி... எப்படி செய்யணும் தெரியுமா?
வீட்டு சாப்பாடு தான் ஆரோக்கியமானது என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் ஹோட்டல்களிலும், கல்யாண வீடு போன்ற பொது இடங்களில் நாம் சாப்பிடும் போது கிடைக்கும் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். சில சமயங்களில் அடிக்கடி சாப்பிட தோன்றினாலும், ஆரோக்கியம் குறித்த கவலையால் அதை தவிர்க்கவும் செய்வோம்.
வீட்டில் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் அந்த சுவையை கொண்டு வருவது சற்று கடினமாக இருக்கும். அப்படி நாம் முயற்சி செய்யும் ஒன்று தான் கல்யாண வீட்டு வத்தல் குழம்பு. அதை எப்படி சுவை மாறாமல் செய்வது, எப்படி சேமித்து வைத்து அவ்வப்பொழுது பயன்படுத்தி கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 20 பல்
பச்சைமிளகாய் - 5
தேங்காய் - ½ மூடி
வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
தக்காளி - 1
மணத்தக்காளி வத்தல் - 2 டேபிள் ஸ்பூன்
சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - ½ டீ ஸ்பூன்
சோம்பு - ¼ டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
கடுகு - ¼ டீ ஸ்பூன்
வரமிளகாய் - 5
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன்
வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
மிளகு - ½ டீ ஸ்பூன்
வர மிளகாய் - 10
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
பச்சரிசி - ½ டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
- வாணலியை அடுப்பில் வைத்து அரிசி, கொத்தமல்லி விதை, மற்றும்
வரமிளகாய் 10 மட்டும் சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு,
மற்றும் மிளகு சேர்த்து கருகிவிடாமல் நன்கு வறுக்கவும்.
- வாசனை வந்ததும் அதனுடன் கருவேப்பில்லை சேர்த்து நன்கு நொறுங்கும்
பதத்திற்கு வறுத்து கொள்ளவும்.
- பின் அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும்
பெருங்காயம் சேர்த்து கிளறி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ சோம்பு சேர்த்து மைய அரைத்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து
காய்ந்ததும் கடுகு, மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் மிளகாயை கிள்ளி எண்ணெயில் சேர்க்கவும்.
- அதனுடன் மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய் வைத்து சேர்த்து
பொரிய விடவும்.
- அதன் பின் தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.
- அதனுடன் பூண்டு மற்றும் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக
வதக்கவும்.
- நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக கிளறி, அதனுடன் மஞ்சள் தூள்
மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பூண்டு நன்றாக வதங்கியதும், அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து
கிளறிவிடவும்.
- அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கெட்டியாக
பாத்திரத்தில் ஒட்டாத பதம் வரும் வரை வேக விடவும்.
- புளியை உற வைத்து கரைத்து சாறு எடுத்து அதை சேர்த்து நன்றாக கொதிக்க
விடவும்.
- பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து
எண்ணெய் பிரித்து வரும் வரை கொதிக்க விடவும்.
- அதன் பின் நாம் அரைத்து வைத்த பொடி மற்றும் சிறிது கருவேப்பில்லை
சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் கல்யாண வீட்டு வத்தல் குழம்பு
ரெடி.
பின் குறிப்பு:
இதை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை கெடாமல் இருக்கும். இதை நீங்கள் பிரிட்ஜ்-ல் வைத்தால் மாதக் கணக்கில் கூட கெட்டுப் போகாமல் இருக்கும். அவசர சமயத்தில் உங்கள் சமையல் அறையில் உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
