Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பார் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க..
Kalyana Veetu Arachu Vitta Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி வீட்டில் சாம்பார் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பாரை செய்யுங்கள்.
இந்த சாம்பார் ஒருசில ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சுவையான சாம்பார் போன்றே இருக்கும். இப்படி சாம்பார் செய்தால், சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது மட்டுமல்லாமல், கிண்ணத்திலும் ஊற்றி குடிப்பார்கள். அந்த அளவில் சுவை ருசியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* பூண்டு - 4 பல்
* பெரிய தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அவரைக்காய் - 1 கையளவு (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கையளவு (நறுக்கியது)
* கேரட் - 1 கையளவு (நறுக்கியது)
* மாங்காய் - 4 துண்டு (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* வேக வைத்த துவரம் பருப்பு - 100 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து பொடிக்கு..
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 1/4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1 கையளவு
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 சிட்டிகை
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* மிளகு - 15
* சின்ன வெங்காயம் - 5
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் 100 கிராம் துவரம் பருப்பை வேக வைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும். பின் அதில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு
பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது உப்பு மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய அவரைக்காய்,
முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், மாங்காய், கத்திரிக்காய் சேர்த்து
நன்கு கிளறி விட்டு, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் ஓரளவு வதங்கியதும், அதில் சிறிது நீரை ஊற்றி, மூடி
வைத்து 5 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி சேர்த்து மிதமான தீயில் வைத்து
நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், மிளகு, கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து,
மல்லி, பெருங்காயத் தூள், வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி, அதில் 1 கையளவு தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, தேங்காயை
மட்டும் எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து காய்கறிகள் வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை
சேர்த்து கிளறி மீண்டும் மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும். * சாம்பார் நன்கு கொதித்ததும், அதில் புளிச்சாற்றினையும்
சேர்த்து, அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து கிளறி,
உப்பு சுவை பார்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி, மூடி வைத்து 5
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காய் வதக்கிய நெய்யைக் கொண்டு தாளிக்க வேண்டும்.
அதற்கு அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வெந்தயம்,
உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு பொரிய விட
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், சிறிது உப்பு
சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி, கொதித்துக்
கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான
கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications











