Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கல்யாண வீட்டு ரசம் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. ட்ரை பண்ணிப் பாருங்க..
Kalyana Veetu Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் வைப்பீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் ரசம் வைக்க நினைக்கிறீர்களா? உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த ரசத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்யுங்கள்.
இந்த ரசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். கல்யாண வீட்டு ரசம் மட்டும் எப்படி அவ்வளவு ருசியாக உள்ளது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவல் இருக்கும். இதற்கு தனியாக ஒரு மசாலா அரைத்து சேர்ப்பது தான் இதன் ரகசியம்.

உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப் + 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
* நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பு,
மல்லி, மிளகு, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகம், கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, பெருங்காயத் தூள்
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து, அதோடு 1 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் அரைத்த பொடியை
சேர்த்து கிளறி, கொதி வந்ததும் இறக்கி, கொத்தமல்லி மற்றும்
நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்தால்,
சுவையான கல்யாண வீட்டு ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
