Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
கல்யாண வீட்டு கதம்ப சாம்பார் டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாருங்களேன்...
Kalyana Veetu Kadamba Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? நீங்கள் வைக்கும் சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்காதா? கல்யாண வீடுகளில் செய்யும் சாம்பார் மட்டும் எப்படி அவ்வளவு ருசியாக உள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அப்படியானால் கீழே கல்யாண வீட்டு சாம்பார் சுவையாக இருப்பதன் ரகசியம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சாம்பாரை எப்படி சிம்பிளாகவும், ஈஸியாகவும் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கல்யாண வீட்டு கதம்ப சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு கதம்ப சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்ழ எனறு எங்களுடன் உங்கள் கருர்ததுக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 3/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்ழுன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6-7
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
சாம்பாருக்கு...
* முருங்கைக்காய் - 2
* கேரட் - 1
* மஞ்சள் பூசணி - சிறிது
* முள்ளங்கி - 1
* அவரைக்காய் - 6
* கத்திரிக்காய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 15
* சின்ன தக்காளி - 1
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் மற்றும் பாசிப்பருப்பை எடுத்து, நீரில்
2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், நறுக்கிய
தக்காளி மற்றும் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு புளியை நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, மல்லி, வெந்தயம், சீரகம், மிளகு,
பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சாம்பாருக்கு கொடுத்துள்ள காய்கறிகளை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும். பின் ஊற வைத்த புளியை கைகளால் பிசைந்து, சக்கையை
எடுத்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு
பருப்பை மசித்து விட வேண்டும்.
* பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அதோடு, அரைத்து
வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி, புளிச்சாறு
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம்
காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் நாட்டுச்சர்க்கரை
சேர்த்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் சின்ன வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்கி, பின் அனைத்தையும் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாருடன்
சேர்த்து, 2 டீஸ்பூன் நெய்யை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான
கல்யாண வீட்டு கதம்ப சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications











