Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தோசைக்கு இந்த ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி செஞ்சு பாருங்க... எல்லோரும் 2 தோசை அதிகமா சாப்பிடுவாங்க...!
Kadappa Chutney Recipe in Tamil: வீட்டில் சமைப்பவர்களுக்கு சமைப்பதை விட பெரிய பிரச்சனையாக இருப்பது என்ன சமைக்கலாம் என முடிவு எடுப்பது தான். நம் வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ்-ன் புண்ணியத்தில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவும் காலை உணவும் இட்லி, தோசை தான்.
ஆனால் அதற்கு சைடு டிஷ்-ஷாக என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டியதும் கவலைபடக் கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. உங்க கவலைய கொஞ்சம் குறைக்க உதவுற வகைல ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி எப்படி செய்யறதுன்னு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி - ஒரு துண்டு (ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- தக்காளி - 2 (நன்றாக பழுத்தது)
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- தேங்காய் - ½ மூடி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
- தக்காளியை ஒன்று இரண்டாக வதக்க நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் எள்ளு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், உரித்து வைத்த பூண்டு, மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.
- அதில் புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- கடைசியாக அதனுடன் தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
- நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான கடப்பா சட்னி தயார்!



Click it and Unblock the Notifications
