Latest Updates
-
கேஸ் அடுப்பு ஆரஞ்சு நிறத்தில் எரிவதற்கு காரணம் என்ன தெரியுமா? அப்படி எரிஞ்சா என்ன பண்ணனும் தெரியுமா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் உருவான முதல் கம்பெனி எது தெரியுமா? இன்று அந்த கம்பெனியின் மதிப்பு 60,000 கோடியாம் -
1 பீர்க்கங்காயும், 4 முட்டையும் இருந்தா.. இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
காளானும், உருளைக்கிழங்கும் இருந்தா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
ஆன்டிபயாடிக் எதிர்ப்பைத் தடுக்க ஆய்வகப் பரிசோதனைகள் எப்படி உதவும்? விளக்கும் டாக்டர்! -
இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் இதுதான் - இது எங்க இருக்குனு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
நேருக்கு நேர் இருக்கும் ராகு-செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்டி அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முடக்கத்தான் கீரை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
நவம்பர் 19, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படப்போகுதாம்
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க..
Kadalai Paruppu Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் உங்கள் வீட்டில் உள்ளோர் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அப்போது வழக்கமாக செய்வது போன்று வெங்காய பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து கொடுப்பதற்கு பதிலாக, ஒருமுறை கடலைப்பருப்பு பக்கோடாவை செய்யுங்கள். இந்த பக்கோடா டீக்கடையில் ஃபேமஸானது. இந்த பக்கோடாவை ஒருமுறை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த பக்கோடாவை செய்து கொடுக்குமாறு சொல்வார்கள். அந்த அளவில் இந்த பக்கோடா ருசியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கடலைப்பருப்பு பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 50 மிலி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4 (தட்டியது)
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 50 மிலி + பொரிப்பதற்கு தேவையான அளவு
* கடலை மாவு - 2 கப்
* பச்சரிசி மாவு - 1 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு, சோம்பு, பெருங்காயத்
தூள், சோடா உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 50 மிலி நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை
சேர்த்து, 50 மிலி எண்ணெயை ஊற்றி கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் கடலை மாவு மற்றும் பச்சரிசி மாவை சேர்த்து, அத்துடன்
வறுத்த வேர்க்கடலையை சேர்த்து, கைகளால் அழுத்தி பிசையாமல் மென்மையாக
கிளறி விட வேண்டும்.
* மாவு மிகவும் வறண்டு போயிருந்தால், லேசாக நீரைத் தெளித்து, பக்கோடா
மாவு பதத்திற்கு பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை
கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொரித்து எடுத்தால்,
சுவையான மற்றும் மொறுமொறுப்பான கடலைப்பருப்பு பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications
