Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
இட்லிக்கு ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Kadala Paruppu Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லிக்கு சட்னி தான் சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் சட்னி என்றாலே தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னியைத் தான் செய்வீர்களா?
அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் கடலைப் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு கார சட்னியை செய்யுங்கள். இந்த கடலைப்பருப்பு கார சட்னி இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு கடலைப்பருப்பு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 3
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 7
* புளி - 1 சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான
தீயில் வைத்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பூண்டு,
வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, ஒருமுறை அரைத்துவிட்டு, பின் சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான கடலைப்பருப்பு கார சட்னி தயார்.
Image Courtesy: Apoorvas Nalabagam



Click it and Unblock the Notifications
