Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்... கடலைப் பருப்பு சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு அற்புதமான, அதே சமயம் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் கடலைப் பருப்பு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியானது மாலை வேளையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சீக்கிரம் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது.
முக்கியமாக இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். உங்களுக்கு கடலைப் பருப்பு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் கடலை பருப்பு, வரமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கடலைப் பருப்பு சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
