Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
காளானை வைச்சு இந்த தாபா ஸ்டைல் கடாய் மஷ்ரூம் செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்...!
Kadai Mushroom Recipe in Tamil: சிக்கன், மட்டனுக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு சுவையான உணவென்றால் அது மஷ்ரூம்தான். அசைவ உணவுகளை எப்படியெல்லாம் சமைக்கிறோமோ அத்தனை வழிகளிலும் காளானை சமைக்கலாம். உங்கள் வீட்டில் தோசை அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அப்படியெனில் அதற்கு காளான் சிறந்த சைடிஷாக இருக்கும்.
பொதுவாக தாபாக்களில் சப்பாத்திக்கு ஒரு சூப்பர் சைடிஷ் பரிமாறுவார்கள். அதுதான் கடாய் மஷ்ரூம். அந்த கடாய் மஷ்ரூமை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இந்த கடாய் மஷ்ரூம் தோசை, சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிட வேற லெவலில் இருக்கும். இது தாபாக்களில் பரிமாறப்படும் கிரேவி போலவே இருக்கும். உங்களுக்கு தாபா ஸ்டைலில் கடாய் மஷ்ரூம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- காளான் - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- குடைமிளகாய் - 1
- தக்காளி - 2
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - ஒரு துண்டு
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - அரை ஸ்பூன்
- பட்டர் -1 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை அலங்கரிக்க
வறுத்து அரைக்க:
- வர மிளகாய் -2
- தனியா - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- கசூரி மேத்தி -1 டேபிள் ஸ்பூன்
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- ஜாதிபத்திரி - சிறிதளவு
செய்முறை:
- வறுத்து அரைக்க கொடுத்து உள்ள பொருட்களில் கசூரி மேத்தி தவிர மற்ற பொருட்களை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு அதே சூட்டில் கசூரி மேத்தி சேர்த்து வறுக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பெரிய வெங்காயம் .பூண்டு ,இஞ்சி போட்டு வதக்கவும்
- இவை வதங்கிய பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி ,சிறிது மஞ்சள் ,வறுத்து வைத்து இருக்கும் அனைத்து மசாலாவையும் இதனுடன் போட்டு கலந்து வைக்கவும்.
- இந்த கலவை ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும். பிரியாணி இலையைத் தவிர அனைத்தையும் அரைக்கவும்.
- கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பாதி வேகும் அளவு வதக்கவும், வதக்கிய பின் அதை எடுத்து தனியாக வைத்து விட்டு ,அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நைசாக அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். மஷ்ரூம் நன்கு வெந்த பின் உப்பு சரிபார்த்து சேர்க்கவும்.
- பின்னர் அரை ஸ்பூன் சுகர் சேர்க்கலாம். இறுதியாக வதக்கி வைத்து இருக்கும் பெரிய வெங்காயம் குடைமிளகாய் துண்டுகள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
- பின் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.



Click it and Unblock the Notifications
