Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
இட்லி, தோசை செஞ்சு போரடிக்குதா? அப்ப 2 கப் ஜவ்வரிசி இருந்தா காலையில இந்த மாதிரி செய்யுங்க..
Javvarisi Peanut Kichadi Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியுடன், வேர்க்கடலையை சேர்த்து ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட கிச்சடியை செய்யுங்கள். இந்த கிச்சரி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு ஜவ்வரிசி வேர்க்கடலை கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி வேர்க்கடலை கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 2 கப்
* நெய்- 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உளுளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* வறுத்த வேர்க்கடலை - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஜவ்வரிசியை நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும். பின்
அதில் ஜவ்வரிசி மூழ்கும் வரை நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் 1/2 கப் வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள உ.ருளைக்கிழங்கு மற்றும்
வேர்க்கடலையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
ஒருசேர 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 4
நிமிடம் வேக வைக்க வேண்டும். 4 நிமிடம் ஆனதும் மூடியைத் திறந்து,
அதில் பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து கிளறி,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி வேர்க்கடலை கிச்சடி
தயார்.
Image Courtesy: Yummy Tummy Aarthi



Click it and Unblock the Notifications
