Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில இப்படி ஒரு டிபன் செய்யுங்க.. டேஸ்ட்டா இருக்கும்..
Javvarisi Adai Dosa Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் என்ன டிபன் செய்வதென்று முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இன்று காலை என்ன டிபன் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா?
வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு ஒரு அடை தோசையை சுடுங்கள். இந்த ஜவ்வரிசி அடை தோசை அடிக்கும் வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என அனைத்துமே நன்றாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1/2 கப்
* இட்லி மாவு - 3 கப்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 7 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஜவ்வரிசியை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 3
மணிநேரம் கழித்து, ஜவ்வரிசியில் உள்ள நீரை வடித்துவிட வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து, நீர்
சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள வரமிளகாயை சேர்த்து, அத்துடன்
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய வெங்காயம்
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து துருவிய கேரட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் மாவை ஊற்றி அடை
போன்று சுற்றி, மேலே சிறிது கேரட்டைத் தூவி, எண்ணெய் ஊற்றி, குறைவான
தீயில் வைத்து, நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி அடை
தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
