Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
சன்டே ஸ்பெஷல்: ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு
Japanese Chicken Curry: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வாரம் சிக்கன் வாங்க போகிறீர்களா? அப்படியானால் ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு செய்யுங்கள்.
இந்த சிக்கன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (நறுக்கியது)
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* சிக்கன் ஸ்டாக் - 2 கப்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கன் நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த
சிக்கனை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் மைதா, உப்பு, மிளகுத் தூள்
சேர்த்து கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கு, கேரட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி
தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்ற சூடானதும், சிக்கனை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் சிக்கனை
வேக வைத்து இறக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப்
போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கக
வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து
கிளறி, 30 நொடிகள் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவை சேர்த்து, 2-3 நிமிடம் பச்சை
வாசனை போக கிளறி, பின் சிக்கன் ஸ்டாக்கை சேர்த்த நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் சோயா சாஸ், சர்க்கரை, உப்பு, தக்காளி கெட்சப்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து சிக்கன் மற்றும் காய்கறிகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில்
வைத்து மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு
தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications