Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
இனி பலாக்கொட்டையை தூக்கி போடாம.. ஒருடைம் இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்...
Palakottai Pakoda Recipe In Tamil: வீட்டில் பலாக்கொட்டை நிறைய இருக்கா? அந்த பலாக்கொட்டையை தூக்கி போட மனம் இல்லையா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மாலை வேளையில் ஒரு பக்கோடாவை செய்யுங்கள். இந்த பலாக்கொட்டை பக்கோடாவானது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்டால், இந்த பக்கோடாவை செய்து கொடுங்கள். இதனால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பலாக்கொட்டை பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்கொட்டை பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பலாக்கொட்டை - 300 கிராம்
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
* சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பலாக்கொட்டையின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது
உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு,
பலாக்கொட்டைகளை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு வேக வைத்த கொட்டைகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை
கொரகொரவென்று அரைத்து, ஒரு அகலமான கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அத்துடன் பூண்டு பற்களை தட்டிப் போட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி,
கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் கடலை மாவு, பச்சரிசி மாவு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கைகளால் ஒருமுறை பிசைய வேண்டும். பின் சிறிது நீரைத் தெளித்து
பிசைந்து, பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான பலாக்கொட்டை பக்கோடா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications










