Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
பலாக்காய் வாங்கி ஒருடைம் இப்படி பொடிமாஸ் செய்யுங்க.. மட்டன் டேஸ்ட்-ல செமயா இருக்கும்..
Jackfruit Podimas Recipe In Tamil: தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பலாக்காயை அதிகம் மார்கெட்டுகளில் காணலாம். பலாப்பழத்தை போலவே, பலாக்காயும் அருமையான சுவையைக் கொண்டது. சொல்லப்போனால் பலாக்காயைக் கொண்டு பொடிமாஸ் செய்யும் போது, அது மட்டன் பொடிமாஸ் போன்றே சுவையைக் கொண்டிருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோர் பலாக்காயை சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு ஒருமுறை இந்த பலாக்காய் பொடிமாஸை செய்து கொடுங்கள். இதனால் பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் ஒருமுறை இதை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பலாக்காய் பொடிமாஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்காய் பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பலாக்காய் - 1
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 மூடி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 6 பல்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 2 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
பொடிமாஸிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 4 பல்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* நெய் - 1 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கைகளில் எண்ணெயை தடவி பலாக்காயை எடுத்து, அதன் மேல் தோலை
நீக்கிவிட்டு, துணியால் துடைத்துவிட்டு, பின் இரண்டாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் வெட்டிய பலாக்காயை வைத்து, அதில் காய் ஓரளவு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு
மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி
2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,
பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மல்லி விதைகளை சேர்த்து கொரகொரவென்று
அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து கொரகொரவென்று பொடித்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய
வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள், மல்லித் தூள்
சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரில் உள்ள பலாக்காயை எடுத்து, அதை வெட்டி நடுவே உள்ள
தண்டு பகுதியை நீக்கிவிட்டு, மீதமுள்ளதை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஜாரில் இந்த பலாக்காயை சேர்த்து பொடிமாஸ் பதத்திற்கு
கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* தக்காளி மற்றும் மசாலாவில் உள்ள பச்சை வாசனை போக நன்கு
வெந்துவிட்டால், அத்துடன் அரைத்த பலாக்காயை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1/4 டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து, சிறிது நீரைத்
தெளித்துவிட்டு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி விட்டு,
மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அத்துடன் வேர்க்கடலை பொடியை சேர்த்து கிளறி,
கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து 1 நிமிடம் வேக வைத்து, மூடியைத்
திறந்து கிளறினால், சுவையான பலாக்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











