Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... ருசியான... ஜாக்கெட் பொட்டேட்டோ
குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் அடிக்கடி ஏதாவது செய்து கொடுக்க கேட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் ஜாக்கெட் பொட்டேட்டோ. உங்கள் வீட்டில் ஓவன் இருந்தால், இந்த ஜாக்கெட் பொட்டேட்டோவை செய்து கொடுக்கலாம்.
இந்த ஜாக்கெட் பொட்டேட்டோ மிகவும் சுவையானது என்பதால், குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு ஜாக்கெட் பொட்டேட்டோ எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜாக்கெட் பொட்டேட்டோ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 4
* உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மயோனைஸ் - 3 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* ஆரிகனோ - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீஸ் - 1/2 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதை நன்கு
உலர்த்திக் கொள்ள வேண்டும். பின் அவற்றை இரண்டு துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் பேக்கிங் ட்ரேயை எடுத்து, அதில் இந்த உருளைக்கிழங்குகளை
வைத்து, அதன் மேல் எண்ணெய் தடவி, சிறிது உப்பு தூவ வேண்டும்.
* பின்பு 180 டிகிரியில் ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் இந்த ட்ரேயை
வைத்து 25-30 நிமிடம் வைத்து, வெளியே எடுத்து குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் மயோனைஸ், வெண்ணெய், நறுக்கிய பூண்டு, ஆரிகனோ,
சில்லி ப்ளேக்ஸ், தக்காளி சாஸ், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கின் தசைப்பகுதியை மட்டும் ஒரு
ஸ்பூன் கொண்டு எடுத்து, அதை மயோனைஸ் உடன் சேர்க்க வேண்டும். பின்பு
அவற்றை நன்கு மசித்துவிட வேண்டும்.
* அடுத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை உருளைக்கிழங்கு
தோலில் வைத்து நிரப்ப வேண்டும்.
* பின் அந்த ட்ரேயை 200 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யப்பட்ட
ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
* பின் அந்த ட்ரேயை வெளியே எடுத்து, உருளைக்கிழங்கின் மேல் துருவிய
சீஸை தூவி, ஓவனில் வைத்து 5 நிமிடம் பேக் செய்து எடுத்தால், ஜாக்கெட்
பொட்டேட்டோ தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications