Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ஜப்பார் பாய் ஸ்டைல்.. 1/2 கிலோ சிக்கன் பிரியாணி - 20 நிமிடத்தில் குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாருங்க..
Jabbar Bhai Style Cooker Chicken Biryani: உங்கள் வீட்டில் உள்ளோர் பிரியாணி பிரியர்களா? அதனால் அடிக்கடி வீட்டில் பிரியாணி செய்வீர்களா? இந்த வாரம் சிக்கன் பிரியாணி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் சிக்கன் பிரியாணியை செய்யாமல், மிகவும் பிரபலமான ஜப்பார் பாய் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். அதுவும் 1/2 கிலோ சிக்கனைக் கொண்டு குக்கரில் பிரியாணியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் பிரியாணியின் ஸ்பெஷலே, அதில் மசாலா அதிகமாக இருக்காது. மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். பேச்சுலர்கள் நல்ல சுவையான பிரியாணியை செய்து சாப்பிட நினைத்தால், இந்த ஸ்டைலை முயற்சிக்கலாம். இப்படி ஒருமுறை பிரியாணி செய்தால், பின் இந்த ஸ்டைலில் தான் எப்போதும் பிரியாணி செய்வீர்கள்.

உங்களுக்கு ஜப்பார் பாய் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை குக்கரில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜப்பார் பாய் ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 100 மிலி
* வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பட்டை - 2 சிறிய துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* கொத்தமல்லி - 1/4 கைப்பிடி
* புதினா - 1/4 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 200 கிராம் அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 100 மிலி
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* தண்ணீர் - 750 மிலி
* பாசுமதி அரிசி - 1/2 கிலோ
* எலுமிச்சை - பாதி (புளிப்பு தேவைப்பட்டால்)
செய்முறை:
* முதலில் சிக்கனை கழுவி நீரை நன்கு வடித்து விட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாசுமதி அரிசியை நீரில் 2-3 முறை கழுவிவிட்டு, மீண்டும்
நீரை ஊற்றி 5-10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, வெங்காயம்
நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து புதினாவை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாயை தூளை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து 5 நொடிகள் வதக்கி, பின் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு சேர்த்து 10 நொடிகள் வதக்க வேண்டும்.
* பிறகு தீயை அதிகரித்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்தது நன்கு 1
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து தீயை உயர்த்தி, 750 மிலி நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி
விசில் போடாமல் லேசாக புகை வரும் போது, தீயைக் குறைத்து, குக்கரைத்
திறந்து, கிளறி விட வேண்டும்.
* பின்பு தீயை மீண்டும் உயர்த்தி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியில்
உள்ள நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, சேர்த்து அவ்வப்போது கிளறி விட
வேண்டும்.
* இப்படி 10 நொடிக்கு ஒருமுறை கிளறி விடும் போது, பிரியாணி குலையாமல்
இருக்கும். இப்போது உப்பு சுவை பார்க்க வேண்டும். ஒருவேளை உப்பு
போதாமல் இருந்தால், உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதேப் போல்
புளிப்பு குறைவாக இருந்தால், பாதி எலுமிச்சம் பழ சாற்றினை சேர்த்து
கலந்து, குக்கரை மூடி, உயர் தீயில் வைத்து 1 விசில் வந்ததும், அடுப்பை
அணைத்து விட வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பிரியாணியை கிளறி விட்டால்,
சுவையான ஜப்பார் பாய் ஸ்டைல் சிக்கன் பிரியாணி தயார்.
குறிப்பு: டம்ளர் கணக்கில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கேட்டால், 1 டம்ளர் பாசுமதி அரிசிக்கு 1 1/2 டம்ளர் நீரை ஊற்ற வேண்டும். எனவே எவ்வளவு அரிசியை சேர்க்கிறீர்களோ, இந்த அளவை மனதில் கொண்டு நீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications