ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்

Posted By:

Iyengar Style Vengaya Kuzhambu Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் அட்டகாசமான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயமும், வெந்தயமும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து ஒரு சுவையான ஐயங்கார் ஸ்டைல் வெந்தயக் குழம்பை செய்யுங்கள்.

Iyengar Style Vengaya Kuzhambu Recipe How to Make at Home in Tamil

இந்த ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய வெந்தயக் குழம்பு சாதத்தில் ஊற்றி சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம். பொதுவாக காரக் குழம்பு என்றாலே வெண்டைக்காய், கத்தரிக்காய்தான் பிராதான காய்கறிகளாக இருக்கும். ஆனால் இந்த ஐயங்கார் ஸ்டைல் குழம்புக்கு எந்த காய்கறியும் தேவையே இல்லை.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தயக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் வெந்தயக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- சின்ன வெங்காயம் - 20
- புளி - நெல்லிக்காய் அளவு
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - 1/2 ஸ்பூன்
- தேங்காய்த் துருவல் - 1/3 கப்

செய்முறை:

- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். பின்னர் ஆறவைப்பதற்காக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

- ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு மற்றும் பெருங்காயத்தைச் சேர்க்கவும். கடுகு பொரியட்டும். பிறகு கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- புளியை ஒரு கோப்பை சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். புளியை நன்கு பிசைந்து அதன் சாற்றை எடுக்கவும். விதைகளை நீக்கிவிட்டு, புளிச் சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.

- இந்த புளிச் சாற்றை வாணலியில் ஊற்றவும். அதனுடன் மேலும் ஒரு கோப்பை தண்ணீரைச் சேர்க்கவும்.

- புளிக்கரைசல் கொதித்ததும் சாம்பார் பொடி, உப்பு மற்றும் ஒரு சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கவும்.

- கடாயை ஒரு மூடியால் மூடி, குழம்பை மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில், துருவிய தேங்காய் மற்றும் வறுத்த வெந்தயத்தைச் சேர்க்கவும். அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- அரைத்து வைத்த விழுதைச் சேர்த்துக் குழம்பை 2 நிமிடங்கள் மட்டும் கொதிக்க விடவும். நீண்ட நேரம் கொதித்தால் குழம்பு கசப்பாகிவிடும்.

- இந்தக் குழம்பைச் சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 23, 2026, 12:21 [IST]
Desktop Bottom Promotion