Latest Updates
-
கேரளா ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விவாகரத்து விகிதம் குறைவு என்பது பெருமையா? குடும்ப கௌரவத்திற்காகத் தம்பதிகள் அனுபவிக்கும் மௌனமான சித்திரவதை இதுதானா? -
திருமண உறவில் வரதட்சணை கொடுமை! உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு உங்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? -
சாணக்கிய நீதி படி பெண்கள் அவர்களின் கணவரிடம் எப்போதும் மறைக்கும் 5 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொளுத்துதா? இந்த வாஸ்து செடிகளை வீட்ல வைங்க… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தானா வரும்! -
June 2026 Horoscope: ஜூன் மாதத்தில் பெரும் நஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
வெயில் கொளுத்துதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 வாஸ்து ரகசியங்களை ட்ரை பண்ணுங்க! -
பாபா வாங்கா கணிப்பு படி 2028-ல் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய அழிவு என்ன தெரியுமா? -
அரிசி மாவு சப்பாத்தியும், தக்காளி தொக்கும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, ஹோட்டலில் சாப்பிடுவதை விட செமையா இருக்கும்
Iyengar Style Vendhaya Kuzhambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை வெந்தயக் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் குழம்பு வகைகள் என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த வெந்தய குழம்பு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் வெந்தயக் குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தயக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் - 10
- கத்தரிக்காய் - 2
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- புளி - சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- தனியா (கொத்தமல்லி விதை) - 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
- துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு:
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - ½ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு (உடைத்தது) - 1 டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 1
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
- புளியை ஓடு இல்லமால் சுத்தம் செய்து ஊற வைத்து புளி கரைசல் எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும்.
- அதனுடன் வெந்தயம் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
- அவை நிறம் மாற துவங்கியதும் காய்ந்த மிளகாய் மற்றும் தனியா சேர்த்து நன்கு சிவக்கும் படி வறுத்து ஆற விடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் இரண்டு முறை அரைக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து பின் துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
- கத்தரிக்காயை சுத்தமாக கழுவி துண்டுகளாக நறுக்கி நிறம் மாறாமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும்.
- அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதனுடன் எடுத்து வைத்த புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும்.
- அதில் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
- காய் நன்றாக வேகும் வரை கொதிக்க விட்டு அதனுடன் வெல்லம் சேர்த்து கிளறி விடவும்.
- தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- அதனுடன் வெந்தயம், கடலைப்பருப்பு, மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து அதை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஐயங்கார் வீட்டு வெந்தய குழம்பு தயார்!



Click it and Unblock the Notifications