Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
1 ஸ்பூன் துவரம் பருப்பும், 1 ஸ்பூன் கடலைப்பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்
Iru Paruppu Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு இன்னும் என்ன சட்னி செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? எப்போதும் ஒரே சுவையில் சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் நீங்கள் இதுவரை செய்திராத சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் இரு பருப்பு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகிய இரண்டையும் கொண்டு செய்யக்கூடியது. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இரு பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இரு பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து மிதமான
தீயில் வைத்து, லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, எண்ணெயை
வடிகட்டிவிட்டு, பருப்புக்களை மட்டும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மீதமுள்ள எண்ணெயில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, நறுக்கிய
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு
அரைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, துருவிய
தேங்காய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான இரு பருப்பு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
