Latest Updates
-
மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் தேடிவருமாம் -
வார ராசிபலன் (12 ஏப்ரல் 2026-18 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம் -
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம் -
வெயில் காலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க - இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க -
மங்களூர் ஸ்பெஷல் முளைகட்டிய பாசிப்பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
தமிழ் புத்தாண்டு அன்று உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு மோசமான பலன்களை தரப்போகுது -
இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கியது யார்? அந்த திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? -
இட்லி, தோசைக்கு ஏற்ற பச்ச மாங்கா வேர்க்கடலை சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
வீட்டுல தோசை மாவு இல்லையா? அப்ப 10 நிமிடத்தில் இந்த நீர் தோசையும் கார சட்னியும் செஞ்சு சாப்பிடுங்க..
Instant Neer Dosa With Chutney: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? வீட்டில் உள்ளோர் தோசை வேண்டுமென்று கேட்கிறார்களா? அப்படியானால் 10 நிமிடத்தில் ஒரு நீர் தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியை செய்யுங்கள். இந்த டக்கென்று காம்பினேஷன் நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது வேலைக்கு செல்வோர் டக்கென்று செய்யக்கூடிய வகையிலும் இருக்கும்.
உங்களுக்கு நீர் தோசையும், கார சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நீர் தோசை மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
தோசைக்கு...
* அரிசி மாவு - 2 கப்
* தேங்காய் துருவல் - 1/2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
சட்னிக்கு...
* காஷ்மீரி மிளகாய் - 5
* பூண்டு - 5-6 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* பெரிய வெங்காயம் - 2
* புளி - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் அரிசி மாவை லேசாக 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த அரிசி மாவு, தேங்காய் துருவல், 2 கப்
நீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
மீண்டும் 2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு சட்னி செய்வோம். அதற்கு மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு,
உப்பு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், புளி சேர்த்து நன்கு
அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து கொண்டால், சுவையான
சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
கலந்து வைத்துள்ள மாவை ஒருமுறை கலந்து, தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை
அள்ளி ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான நீர் தோசை தயார்.
முக்கியமாக இந்த தோசையை திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை.
* இந்த நீர் தோசையை, வெங்காய சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது
சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications




