Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இட்லிக்கு இந்த மாதிரி தக்காளி குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Idly Thakkali Kurma Recipe In Tamil: காலையில் இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சட்னி, சாம்பார் செய்து போரடித்து விட்டதா? இட்லிக்கு வாய்க்கு ருசியான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதே சமயம் வழக்கத்தை விட அதிகமாக வீட்டில் உள்ளோர் சாப்பிட வேண்டுமா?
அப்படியானால் தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி குருமாவை செய்தால், காலையில் இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த இட்லி குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இட்லி தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 6
* தக்காளி - 2
* தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, தக்காளி, சின்ன வெங்காயம்,
தேங்காய், ஏலக்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை வாணலியில் வதங்கிக் கொண்டிருக்கும்
பொருட்களுடன் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக
கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான இட்லி
தக்காளி குருமா தயார்.



Click it and Unblock the Notifications