1 கப் புளிச்ச இட்லி மாவு இருந்தா.. ஈவ்னிங் இந்த போண்டாவை செய்யுங்க.. காபி, டீயுடன் சாப்பிட டக்கரா இருக்கும்..

Posted By:

Idli Maavu Kara Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? எப்போதும் கடலை மாவு வெச்சு பஜ்ஜி, வடை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் புளிச்ச இட்லி மாவு இருக்குதா?

அப்படியானால் அந்த இட்லி மாவைக் கொண்டு மாலை வேளையில் நல்ல மொறுமொறுப்பான போண்டாவை செய்யுங்கள். இந்த இட்லி மாவு கார போண்டாவிற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. வெறுமனே சாப்பிடும் அளவிற்கு ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த போண்டாவை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

Idli Maavu Kara Bonda How To Make a Idli Maavu Kara Bonda Recipe

உங்களுக்கு மொறுமொறுப்பான இட்லி மாவு கார போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி மாவு கார போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளித்த இட்லி மாவு - 1 கப்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3 (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
* பூண்டு - 3 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை -1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, வரமிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்த மாவுடன், அரைத்த வரமிளகாய் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை, கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு கார போண்டா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 8, 2024, 15:52 [IST]
Desktop Bottom Promotion