15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Idli Kurma Recipe In Tamil: இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை குருமா செய்யுங்கள். இந்த இட்லி குருமா 15 நிமிடத்தில் செய்யக்கூடிவாறு சுலபமாக இருக்கும். முக்கியமாக வேலைக்கு செல்பவர்கள் இந்த குருமாவை தெரிந்து வைத்துகெள்வது மிகவும் நல்லது. முக்கியமாக இப்படி குருமா செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

Idli Kurma How To Make Idli Kurma In 15 Minutes

உங்களுக்கு இந்த இட்லி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 8 (கீறியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3/4 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்து வைத்துள்ள மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கீறிய பச்சை மிளகாயை சேர்த்து லேசாக நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சோம்பு, கசகசா, முந்திரி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதக்கியதும், அதில் மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட
* வேண்டும்.
* பின்பு அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி கிளறி, லேசாக கொதி வர தொடங்கியதும், அதில் கொத்தமலியைத் தூவி இறக்கினால், சுவையான இட்லி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 6, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion