4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்

Posted By:

Hyderabadi Egg Masala Curry Recipe in Tamil: சாதம், சப்பாத்தி, மற்றும் தோசைன்னு எல்லாத்துக்கும் சூப்பரா செட்டாகுற ஒரு குழம்புன்னா அது முட்டை குழம்பு தான். இது எல்லாருக்கும் பிடிச்ச குழம்பும் கூட. அதிலும் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சிக்கன், மட்டனை விட முட்டை சாப்பிடுபவர்கள்தான் அதிகம். பெரும்பாலும் முட்டை குழம்புன்னா முட்டையை குழம்பு உடைத்து விட்டு வேக வைப்போம். இல்லனா வேக வைத்த முட்டையை சேர்த்து கிரேவி செய்வோம்.

Hyderabadi Egg Masala Curry Recipe How to Make at Home in Tamil

எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரி முட்டைக்குழம்பு செய்றது. முட்டையை கொஞ்சம் வித்தியாசமாக ஹைதராபாத் ஸ்டைலில் ஒருமுறை கிரேவி செஞ்சு பாருங்க. இந்த ஹைதராபாத் முட்டை மசாலா புலாவ், தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் அருமையாக இருக்கும். இந்த முட்டை மசாலா செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

உங்களுக்கு ஹைதராபாத் முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 4 முட்டை
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- 1 ஸ்பூன் எள்
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் சீரகத்தூள்
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1/2 கப் புளிச்சாறு
- 5 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை
- 1 ஸ்பூன் நறுக்கிய புதினா
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

- முட்டையை 10 நிமிடம் வேகவைத்து பின்னர் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் முட்டையில் கீறல் போட்டு வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் வேர்க்கடலையைச் சேர்த்து மிதமான தீயில் வெடிக்கத் தொடங்கும் வரை வதக்கவும்.

- வேர்க்கடலை வெடித்து நிறம் மாறியதும் எள், துருவிய தேங்காய் சேர்க்கவும். மிதமான தீயில் தேங்காய் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆறவைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்னர் இதை எடுத்து தனியாக வைக்கவும்.

- இப்போது வேர்க்கடலை கலவை, வதக்கிய வெங்காயம் மற்றும் தண்ணீரை மென்மையான பேஸ்ட்டில் கலக்கவும்.

- ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வேர்க்கடலை விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் சீரகத் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, கீறி வைத்த முட்டை, புளி சாறு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

- குழம்பு நன்கு கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- அவ்வளவுதான் சூப்பரான ஹைதராபாத் முட்டை மசாலா ரெடி. இதை சாதம் அல்லது சூடான சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 3, 2026, 14:42 [IST]
Desktop Bottom Promotion