Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Hyderabadi Chicken Gravy Recipe In Tamil: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்க செய்யப் போகிறீர்களா? அப்படி சிக்கன் செய்வதாக இருந்தால் ஒரே மாதிரி சிக்கனை சமைக்காமல், ஒருமுறை ஹைதராபாதி சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். ஒருமுறை இந்த கிரேவி செய்தால் பின் அடிக்கடி செய்வீர்கள்.
உங்களுக்கு ஹைதராபாதி சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாதி சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 3/4 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* கெட்டி தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை - பாதி
* ப்ரைடு வெங்காயம்
கிரேவிக்கு...
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பட்டை - 3 சிறிய துண்டு
* ஊற வைத்துள்ள சிக்கன்
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
ப்ரை செய்து, தனியாக எண்ணெயை வடிகட்டிவிட்டு, வெங்காயத்தை மட்டும் ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கெட்டியான தயிர், பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், மிளகுத்
தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பாதி எலுமிச்சையின்
சாற்றினை ஊற்றி, பின் அதில் ப்ரை செய்து வைத்துள்ள வெங்காயத்தை
கைகளால் நசுக்கி சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, 1 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து கிரேவி செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
வெங்காயம் ப்ரை செய்த எண்ணெயை ஊற்றி, அத்துடன் கிராம்பு, ஏலக்காய்,
பட்டையை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மூடி
வைத்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு நீர் விட்டு வந்ததும், அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து 20-20 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* 25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி, அதில் கொத்தமல்லியைத்
தூகி கிளறினால், சுவையான ஹைதராபாதி சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
