Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Hyderabad Rottu Kadai Thanni Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னியை செய்தால், தொட்டு சாப்பிடாமல் அள்ளி ஊற்றி பிசைந்து சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். அதுவும் மழை நேரத்தில் இந்த சட்னியை செய்தால், சற்று காரமாகவும் வாய்க்கு ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* வேர்க்கடலை - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி
மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
அத்துடன் 1/2 கப் வேர்க்கடலை, 1/2 கப் பொட்டுக்கடலை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சற்று அதிகமாக
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
