Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
மீதமான சாதத்தை வைத்து செய்யும் ஆரோக்கியமான மிளகு சாதம்... ட்ரை பண்ணி பாருங்க... டெஸ்ட் பிச்சிக்கும்...!
பொதுவாகவே பெண்களுக்கு வீட்டில் எதையும் வீணாக்குவது பிடிக்காது. அதிலும் சாப்பாட்டை வீணாக்காமல் இருக்க பல முயற்சிகள் செய்வார்கள். என்ன முயற்சி செய்தாலும், குழந்தைகள் மீதம் வைத்ததை சாப்பிட்டதும் பாதி வயிறு நிரம்பி விடும். அதனால் பெரும்பாலான நேரத்தில் இவர்கள் உணவை தவிர்ப்பது, அல்லது வீட்டு வேலையில் கவனம் செலுத்துவதால் சரியாக சாப்பிடாமல் இருப்பது என பல காரணங்களால் உணவு மீந்துவிடும். அவற்றை இரவில் கணவருக்கு குழந்தைகளுக்கு தர விரும்பாமலும், வீணாக்க மனமில்லாமாலும் அவர்களே சாப்பிட்டு, இறுதியில் சர்க்கரை நோயாளி ஆகும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

சிலசமயங்களில் மீதமான சாதத்தை ஆரோக்கியமான உணவாக எளிதில் மாற்றலாம். மீதமான உணவை அனைவரும் சாப்பிடும் ஒரு ஆரோக்கிய உணவாக எப்படி மாற்றலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - ½ ஸ்பூன்
உளுந்து - ½ ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
பெரிய வெங்காயம் - 2
வேக வைத்த சாதம் (அ) மிதமான சாதம் - 1 கப்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 10
காய்ந்த திராட்சை - 15
நெய் - 1½ ஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - ½ ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம் மற்றும் மிளகாயை நறுக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொறிய விடவும். பின், அதனுடன் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுந்து, மற்றும் முந்திரி சேர்த்து சிவக்கும் படி வதக்கும்.
அதனுடன் காய்ந்த திராட்சை, மற்றும் பெருங்காயத்தை சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியது நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதங்கிய உடன், சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும். சாதம் நன்றாக சூடேறியதும், கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான மிளகு சாதம் தாயார்.
மிளகு சாத நன்மைகள்
இது உடல் எடையை குறைக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், வாய்வு கோளாறுகளை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்க மிளகில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. மருத்துவ ஆய்வுகளில் படி, மிளகு புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. மிளகுடன் மஞ்சள் சேர்த்து சமைக்கும் பொழுது, புற்று நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications