Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
இனி டின்னருக்கு இந்த வெல்ல தோசையை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க.. இரவு நன்றாக தூங்குவார்கள்..!
வெல்ல தோசை என்பது கோதுமை மாவு மற்றும் வெல்லத்தை முக்கிய பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு க்ரீப்ஸ் ஆகும். இந்த தோசை ஆறிய பிறகும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.. இரவு குழந்தைகள் தூங்காமல் இருந்தால் இந்த வெல்ல தோசையை கொடுங்கள்.. அவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும்..
இந்த வெல்ல தோசையை கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சேர்த்து செய்யலாம்.. வெல்லம் கலவையை நன்றாக கலக்குமாறு செய்ய வேண்டும்.. அதன் சுவை மற்றும் ஆரோக்கியமான தேர்வு நல்ல ரிசியை வழங்குகிறது. இந்த தென்னிந்திய பாணி வெல்ல தோசையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.. வாங்க இந்த தோசையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

வெல்லத்தின் நன்மைகள்
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது. வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.
தேவையான பொருள்கள்
1. மைதா மாவு
2. அரிசி மாவு
3. வெல்லம்
4. ஏலக்காய்
5. முந்திரிப் பருப்பு
6. தேங்காய்த் துருவல்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் வெல்லத் தூளைப் போட்டு ஒரு கரண்டி அல்லது போதுமான அளவு தண்ணீரை ஊற்றவும்.
2. பிறகு மேற்கண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
3. வெல்லம் நன்கு கரைந்த மாத்திரத்தில் பாத்திரத்தை இறக்கி வைத்து வடிகட்டவும்.
4. இப்போது நன்கு ஆற வைக்கவும்.
5. ஆறிய பின்பு நறுக்கிய முந்திரி, ஏலக்காய், மைதா மாவு, அரிசி மாவு இவற்றைச் சேர்த்து மேலும் தேவையான அளவு நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
6. தோசை வார்க்கும் சமயத்தில் டால்டா அல்லது எண்ணெய் ஊற்றலாம். டால்டா ஊற்றினால் தோசை மொறுமொறுப்பாக வரும். ஆனால் உடலுக்கு நல்லதல்ல என்பார்கள். எனவே நெய் அல்லது நல்லெண்ணையை பயன் படுத்தலாம்.
பொதுவாக சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை எப்போதுமே பயன்படுத்தி வருவது நல்லது. சர்க்கரை தான் நீரழிவு நோய்க்கு மிகப் பெரிய காரணம். ஆனால் வெல்லம் ஜீரண சக்திக்கு உதவும்.



Click it and Unblock the Notifications
