Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
உப்புக்கண்டம் குழம்பு செஞ்சுருகீங்களா? சண்டேவுக்கு இதை ட்ரை பண்ணுங்க.. மிச்சம் இல்லாமல் தீர்ந்து போகும்..!
சண்டே நாளே கறி குழம்பு, சிக்கன் ஃப்ரை, மீன் குழம்பு என வாரம் வாரம் மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியே செஞ்சு சாப்பிடுறீங்களா? அப்போ இந்த வாரம் இதை ட்ரை பண்ணி பாருங்க.. உப்புக்கண்ட குழம்பு.. ஆனால் இந்த குழம்பு வைக்கணும்னா ஒருவாரமாவது ஆகும்.. காரணம் முதலில் மட்டனை கழுவி விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். அது நன்றாக காய்ந்த பின்னரே குழம்பு வைக்க முடியும்..
நம் முன்னோர்கள் இதனை வெயில் காலத்தில் செய்து வைத்து மழை காலங்களில் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த உப்புக்கண்டம் குழம்பினை செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்
உப்புக் கண்டம் - 200 கிராம்
நறுக்கிய சின்னவெங்காயம் - 15
நறுக்கிய தக்காளி - 3
துருவி தேங்காய் - அரை மூடி
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளிக்கரைசல் - 50 மில்லி
வெந்தயம் - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் - 25 மில்லி
செய்முறை
1. முதலில் உப்புக் கண்டத்தை சூடான நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் 5 சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
4. இதில் புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போன பின் உப்புக் கண்டத்தையும் சேர்த்து வேக விட வேண்டும்..
5. பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி வெந்தயம், உளுந்து, கறிவேப்பிலை மீதம் உள்ள வெங்காயம், முருங்கைக்காய், கத்திரிக்காய் தேவைப்பட்டால் போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்
6. இதில் வெந்த உப்புக்கண்ட கலவையைச் சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்துக் கலந்து விட வேண்டும். பின்பு 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான உப்புகண்டம் குழம்பு தயார்..
சரி இந்த உப்பு கண்டத்தை செய்வது எப்படி தெரியுமா?
எப்போதுமே சுவையான சத்தான உணவு என்றால் அது ஆட்டு இறைச்சிதான். உண்பதற்கு அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். இதனை தென் மாவட்ட கிராமங்களில் இன்றும் செய்து சாப்பிட்டு வருகின்றனர். உப்புக்கண்டம் எளிதாக செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் தெரிந்துக் கொள்ளலாம்.
உப்புக் கண்டம் செய்யத் தேவையான பொருட்கள்
வெள்ளாட்டு இறைச்சி - 1 கிலோ
பூண்டு - 20 பல்,
காய்ந்த மிளகாய் - 15
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. முதலில் ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்..
2. பின்னர் பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்... மசாலா நன்றாக கறியில் பிடிக்க வேண்டும்.
3. இந்தத் துண்டுகளை நூலில் கோத்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் வற்றும் வரை இரண்டு மூன்று நாட்களுக்கு நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
4. தண்ணீர் படாதவரை மூன்று மாதங்கள் வரைகூட கெட்டுப்போகாது. உப்புக்கண்டம் மிகவும் கெட்டியாக இருக்கும். அதனால் தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் லேசாக ஒரு தட்டு தட்டி நசுக்கி விட்டு எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும் அல்லது குழம்பும் செய்து சாப்பிடலாம். சுவையான கிராமத்து ஸ்டைல் உப்புக்கண்டம் தயார்...



Click it and Unblock the Notifications









