Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மண மணக்கும் சாம்பார் வைக்க இந்த சாம்பார் பொடியை யூஸ் பண்ணுங்க.. இதோ ரெசிபி..!
சாம்பார் என்பது நமது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் செய்யப்படும் மற்றும் அதிகளவு விரும்பி சாப்பிடும் ஒருவகை உணவுக்கான சைடிஷ் ஆகும்.. இது தமிழகத்தில் தினமுமே செய்து சாப்பிடுவர்கள்... இதன் செய்முறைகள் மாறினாலும், இதன் மீதான விருப்பம் எப்போதும் விட்டு போவதில்லை. இந்நிலையில் மணமான சாம்பார் வைக்க தேவையான சாம்பார் பொடியை தயார் செய்ய வேண்டும்.. அப்படி செய்யப்பட்ட பொடியில் வைக்கும் சாம்பாரின் டேஸ்டே செம்மையாக ருசியாக இருக்கும்..
இந்த சாம்பாரை காலையில் இட்லிக்கு ஆரம்பித்து மதியம் சாதத்திற்கும், இரவு தோசைக்கும் என நாள் முழுக்க வைத்து சாப்பிடலாம்.. அதனுடன் வடை, மினி இட்லி, கலவையான சாதம் என பலவித உணவுகளுக்கும் இந்த சாம்பாரை சைடிஷாக ஊற்றி சாப்பிடலாம்.. அத்தகைய இந்த சாம்பார் வைக்க தேவையான பாரம்பரியம் மிக்க சாம்பார் பொடியை செய்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருள்கள்
1. காய்ந்த மிளகாய்
2. துவரம் பருப்பு
3. கடலைப் பருப்பு
4. தனியா
5. மிளகு
6. கடுகு
7. விரலி மஞ்சள்
8. வெந்தயம்
செய்முறை
1. மேற்சொன்ன சாமான்களை வெயிலில் காய வைத்து சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்துக் கொண்டால் போதும்.
2. மணம் கமழும் சாம்பார் பொடி ரெடி.
3. பின்குறிப்பு : எந்தப் பொடிகள் ஆனாலும் பொருட்களை வறுத்துப் பேப்பரில் ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர் மிக்சியில் போட்டுப் பொடி செய்யவும். பொடியான பின்னும் கூட பேப்பரில் ஆற வைத்துக் கை போடாமல் ஸ்பூன் கொண்டு உபயோகப்படுத்தவும். அப்படிச் செய்தால் நீண்ட நாட்கள் வரும்.
4. இப்பொடியை தயாரிக்க பயன்படுத்தப்படும் மிளகாய் மற்றும் மல்லியை வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்து கொள்ளலாம். இதர பொருட்களை மட்டும் கூட வறுத்து அதனுடன் மிளகாய் மற்றும் மல்லியை போட்டு அரைத்து கொள்ளலாம். மேலும் இப்பொடியில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சாம்பார் பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
5. இதற்கிடையே மிளகாயை வெயிலில் அதிக நேரம் காய வைக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இதனை நீங்கள் மெஷினில் அரைக்க கொடுக்கும் பொழுது அரைத்து தருபவர்களுக்கு நாசிகளில் பிரச்சனை ஏற்படுகிறதாம். மேலும் இது மெஷின் சூட்டுலேயே நன்கு காய்ந்து அரைப்படும் என்றும் கூறுகிறார்கள்.
6. அதனால் காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லியை மூன்று மணி நேரம் நன்கு வெயிலில் காய வைத்து எடுத்தாலே போதுமானது.. நாள் முழுக்க காய வைக்க வேண்டிய தேவையில்லை..
7. இதில் மிக முக்கியமாக சாம்பார் பொடியை தயாரிக்கும் போது, சில பொருட்களை வறுத்து எடுக்க வேண்டியிருக்கும்.. அப்போது அவை கருகிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications