Latest Updates
-
400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றிய முதல் ஆறு எது தெரியுமா? டைனோசர்களை விட இது பழைய நதியாம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது..
KFC Chicken Recipe : டேஸ்டியான சாஃப்டான கேஎஃப்சி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி?
ஃப்ரைடு சிக்கன் எனச் சொல்லப்படும் கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் பெயரை கேட்டாலே, நாவில் எச்சில் ஊறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் கேஎஃப்சி சிக்கன் முதலிடத்தில் உள்ளது.
பர்த்டே பார்ட்டி தொடங்கி கெட் டூ கெதர் வரை கேஎஃப்சி சிக்கன் இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடைவதில்லை. அதே போல் மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கேஎஃப்சி சிக்கன்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்படுகின்றன. விடுமுறை நாட்களில் கூலாக வீட்டில் இருந்தப்படி, குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கும் கேஎஃப்சி சிக்கன்கள் தேவைப்படுக்கின்றன. அப்படிபட்ட இந்த கேஃப்சி சிக்கனை ரொம்ப ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம்...

எளிய முறையில் வீட்டில் KFC சிக்கன் செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
மைதா - 1 கப்
சோள மாவு - 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க போதுமானது
மரினேட் செய்ய...
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன் இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
உலர் தைம் இலைகள் - 2 டீஸ்பூன்
காய்ந்த ஆர்கனோ - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா பவுடர் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கூடுதல் சுவைக்கு...
சர்க்கரை - 2 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 1
தயாரிக்கும் முறை:
1. முதலில் கோழியை நன்றாக கழுவவும்.
2. பின் கழுவிய கோழியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து, சிக்கனை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. சிக்கன் நன்றாக ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு சிக்கன் துண்டுகளை தனியாக வைக்கவும்.
4. பிறகு ஒரு அகன்ற தட்டில் மைதா, சோள மாவு, மசாலா தூள், பச்சை மிளகாய், பேக்கிங் பவுடர் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
5. பிறகு ஒரு பாத்திரத்தில் மிகவும் குளிர்ந்த ஐஸ் வாட்டரை எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒவ்வொரு சிக்கன் துண்டை போட்டு 7 வினாடிகள் வைத்திருந்து, அதை மாவு கலவையில் சேர்த்து நன்கு பூசி ஒரு தட்டில் வைக்கவும். இதே போல் அனைத்து கோழி துண்டுகளுக்கும் செய்யவும்.
6. பிறகு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு மூடி போட்டு 7 நிமிடம் வதக்கவும்.
7. பின் மூடியைத் திறந்து சிக்கனை திருப்பி மீண்டும் மூடி 7 நிமிடம் வேக வைக்கவும். இதே போல் மீண்டும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்தால் சுவையான KFC சிக்கன் ரெடி..



Click it and Unblock the Notifications