கிரிஸ்பி யம்மி பிரட் கட் லெட்ஸ் செய்ய தெரியுமா? வாங்க இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Posted By:

குழந்தைகள பள்ளி முடிந்து வந்தவுடனேயே மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் வேண்டும் என கேட்கிறார்கள்.. அம்மாக்கள் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், வீட்டில் பிரட் மற்றும் உருளைகிழங்கு இருந்தாலே போதும்.. உடலேயே சுவையான பிரட் கட்லெட் செய்து விடலாம்... இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

ஒரு சூடான கட்லெட், ஒரு கோப்பை தேநீர், நண்பர்களுடன் ஜாலியாக உங்கள் நேரத்தை கழிக்க வேறு என்ன வேண்டும்? மேலும் இந்த பருவ மழைக்கு சூடான மிருதுவான உணவுகளை ருசிக்க சொல்லித்தர வேண்டுமா? என்ன? வாங்க இந்த பிரெட் கட்லெட் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

how to make tasty bread cutlet here the recipe

காய்ச்சல் வந்தா சாதம் சாப்பிட முடியாதவர்கள் இரண்டு அல்லது மூன்று ரொட்டித் துண்டுகள், ஒரு கிளாஸ் பாலும் குடிப்பது பழக்கம்.. நேரமில்லாத போது காலை டிபனாக பிரெட், ஜாம் அல்லது சாண்ட்விச் சாப்பிடுவதுதான் இப்போதைய டிரெண்ட். அதனால்தான் குழந்தைகள் மட்டுமல்ல... கல்லூரிப் பெண்களும், இல்லத்தரசிகளும், வேலையாட்களும் டிபன்களை விட 'ரொட்டிதான் பெட்டர்' என்கிறார்கள். அப்படிப்பட்ட ரொட்டியில் செய்யக்கூடிய வித்தியாசமான சுவைகளில் ஒன்றுதான் இந்த பிரெட் கட் லெட்... இந்த கட்லெட்டை நன்றாக வறுக்க வேண்டும்.. இந்த மிருதுவான கட்லெட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

ரொட்டித் துண்டுகள் - 4

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

உப்பு, மிளகு, கரம் மசாலா தூள் - தலா 1/2 டீஸ்பூன்

மஞ்சள் - 1/2 டீஸ்பூன்

வெங்காய விழுது - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி விழுது - 2 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க போதுமானது.

ரொட்டி தூள் / கசகசா - 1/2 கப்

மைதா - 1 டீஸ்பூன்.

தயாரிக்கும் முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் பிரட் துண்டுகளை சேர்த்து 20 வினாடிகள் வைத்திருந்து உடனே எடுத்து பிழிந்து கொள்ளவும்.

2. பிறகு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பொருட்களை சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

3. சப்பாத்தி போன்றே ரொட்டியை பிசைந்து, அதை குழந்தைகளுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டவும்.

4. மாவுக் கலவையில் தோய்த்து பிரட் பவுடர் அல்லது கசகசாவைப் பரப்பி, பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, பிரட் கட்லெட்டைப் போட்டு, சூடானதும் பொரித்தெடுக்கவும்.

5. அவ்வளவுதான், ரொட்டி கட் லேட் ரெடி.. இதையெல்லாம் ஈவினிங் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.. கண்டிப்பாக குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்..

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 10, 2024, 14:46 [IST]
Desktop Bottom Promotion