Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
நீங்கள் வைக்கும் குழம்புக்கு சுவைக்கூட்டும் வெங்காய வடகம் பற்றி தெரியுமா? இதோ ரெசிபி..!
தென் மாவட்டங்களில் அதிகமாக மத்திய சாப்பாட்டிற்கு குழம்பு சாம்பார், காரக்குழம்பு என எது செய்து சாப்பிடுவார்கள்.. அதில் வெங்காய வடகத்தை வறுத்துப் போட்டால் குழம்பு வாசனையிலும் ருசியிலும் செம்மையாக இருக்கும்.. இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதிலும் மீன் குழம்புக்கு அலாதியாக இருக்கும்.. கட்டி இழுக்கும். இந்த ரெசிபியை வீட்டில் செய்ய டிப்ஸ் இதோ...
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1.5 கப்
பூண்டு பற்கள் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - 1/4 கப் ( 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் )
கடுகு - 1
துவரம்பருப்பு - 1 Tsp
சீரகம் - 1.5 Tsp
வெந்தையம் - 1/2 Tsp
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1 Tsp
மஞ்சள் - 1 Tsp
உப்பு - தேவைக்கு ஏற்ப
ஆமணக்கு எண்ணெய் - 2 Tsp
சமையல் எண்ணெய்

செய்முறை
1. முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்..
2. அதில் கடுகு , வெந்தையம், துவரம்பருப்பு, சீரகம், உப்பு, சிவப்பு மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்குக் கலந்து கொள்ளவும்.
3. அடுத்ததாக ஊற வைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் மொர மொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த அந்த உளுந்தை வெங்காயக் கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தற்போது அந்தக் கலவையை எலுமிச்சைப் பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றை இரவு முழுவதும் அப்படியே உலர்த்தி வைத்து விடுங்கள்..
5. மறுநாள் அந்த உருளை உடைத்து அதில் ஆமணக்கு எண்ணெய் தெளித்து பிரட்டுங்கள். தற்போது மீண்டும் அவற்றை உருளைகளாக உருட்டி வையுங்கள்.
6. இப்படி அதில் நீர் வற்றும் போது சிறிது ஆமணக்கு எண்ணெயை கலந்து உருட்டுங்கள்.. பின்னர் அதனை நன்றாக வெயிலில் உலர வைக்கலாம்.. அல்லது வெயிலுக்கு அருகில் நிழல் உள்ள இடத்தில் ஒரு தட்டில் வைத்து உலர்த்தலாம்..
7. இதற்குக் குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் எடுக்கும். பின் அவை நன்கு உலர்ந்ததும் டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் குழம்பில் தாளித்துக் கொட்டினால் குழம்பு ருசியாக இருக்கும்.
8. இந்த உருண்டைகளை சில்வர் டப்பாவில் அடைத்து வைப்பது நல்லது..



Click it and Unblock the Notifications
