Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
இருமல், சளியை சரிச்செய்யும் நண்டு சூப்.. மழைக்கு இதமாக இருக்கும்.. சண்டே ட்ரை பண்ணுங்கள்..!
மழைக்காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் சூப் செய்துக் கொடுத்தால் நல்லது. காரணம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதினால் நோய் தொற்றுகள் அதிகமாக பரவும்.. அதில் குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவதிப்படுவார்கள்..
அதனால் தினமும் ஒரு சூப் செய்துக் கொடுக்கலாம். அதில் சளியை முறிக்கும் இந்த நண்டு சூபை மழைக்காலம் முடியும் வரை வாரம் ஒருமுறையாவது செய்துக் கொடுங்கள்.. நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. வாங்க இந்த நண்டு சூப்பை வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. நண்டு
2. தக்காளி
3. பெரிய வெங்காயம்
4. இஞ்சி
5. மிளகு
6. சீரகம்
7. எண்ணெய்
8. பூண்டு
9. பச்சைமிளகாய்
10. பட்டை
11. பிரியாணி இலை
12. கொத்தமல்லி இலை
13. உப்பு
செய்முறை
1. முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
2. நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும்.
3. உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
5. நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும்.
6. தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும்.
7. நண்டு நன்கு வெந்ததும் இப்பொழுது மிளகு, சீரகத்தூள் போடவும்.
8. நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும்.
9. இதோ சுவையான நண்டு சூப் தயார்.



Click it and Unblock the Notifications