Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
கிராமத்து ஸ்டைல் தக்காளிப் பச்சடி செய்ய தெரியுமா? இதோ ரெசிபி..!
நாம் அனைவரும் அன்றாடச் சமையலில் அதிகமாக உபயோகப்படுத்தும் மிக முக்கியமான பொருள் தக்காளி. மருத்துவ நலன்கள் நிறைந்த தக்காளியை அப்படியே சாப்பிடலாம் என்றாலும் வீட்டிலுள்ள சில பொருட்களைத் வைத்து அதைப் பச்சடியாகச் சாப்பிடும்போது தனிச்சுவையைத் தரும்.. அது உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.
அத்தகைய தக்காளியில் ருசியான கிராமத்து ஸ்டைல் தக்காளி பச்சடி செய்யலாம்.. தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி பச்சடியை அதிகமாக அவர்கள் செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொளவார்கள்.. பின்னர் அதனை இட்லி, தோசை, சாதம் , சப்பாத்தி, பழைய சோறு என அனைத்திற்க்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.. அனைத்து வைட்டமின் சத்துக்களும் அடங்கிய இந்த தக்காளிப் பச்சடியை செய்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருள்கள்
1. துவரம்பருப்பு
2. மஞ்சள்தூள்
3. பழுத்த தக்காளி
4. சின்ன வெங்காயம்
5. பச்சை மிளகாய்
6. கருவேப்பில்லை
7. சாம்பார் பொடி
8. உப்பு
9. மல்லித்தழை
10. எண்ணெய்
11. கடுகு
12. உளுத்தம்பருப்பு
13. பெருங்காயம்
14. காய்ந்த மிளகாய்
செய்முறை
1. முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்..
2. பின்னர் சின்ன வெங்காயத்தை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்..
3. அதன் பிறகு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
4. துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக அவித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும்.
5. மேற்கண்ட அனைத்தும் வெந்ததும் உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து, பருப்பு, தக்காளி கலவையில் சேர்க்க வேண்டும்..
6. தக்காளி பச்சடியை இறக்கும் போது நறுக்கிய மல்லித் தழையை தூவி கொதித்ததும் இறக்கிவிட வேண்டும்..
7. இதோ சுவையான தக்காளிப் பச்சடி தயார்.
தக்காளிப் பச்சடியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோடை காலங்களில் இதனை செய்து சாப்பிடலாம். மழைக்காலங்களில் மதிய சாப்பாட்டிற்கு நல்ல சைடிஸ் போல இருக்கும்.. ஊறுகாய் சாப்பிடக்க்கூடாது என்பவர்கள் இந்த தக்காளி பச்சடியை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.. சுவை அலாதியாக இருக்கும்..
இந்த தக்காளி பச்சடியை குழந்தைகளுக்கும் ஸ்கூலுக்கு லஞ்ச் பக்ஸ்ல வைச்சுக் கொடுக்கலாம்.. வேலைக்கு செல்பவர்களுக்கும் ஆபீஸ்க்கு லஞ்சுக்கு கட்டிக் கொடுக்கலாம்.. மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு இந்த தக்காளி பச்சடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சைடிஷ் ஆகும்..



Click it and Unblock the Notifications