Latest Updates
-
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
கிராமத்து ஸ்டைல் ஆட்டுக் கறிக் குழம்பு வைக்க தெரியுமா? இதோ ரெசிபி..!
ஆட்டுக் கறிக் குழம்பு அதிக வளர்ச்சியைத் தரும்.. அதனால் இதை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது சிறந்தது.. ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது.
மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.. கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு வைத்தால் வீட்டில் பசங்க கிச்சனையே சுற்றி சுற்றி வருவாங்க.. மிச்சம் இல்லாமல் சாப்பிடுவாங்க.. தற்போது அந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்
1. ஆட்டுக்கறி
2. பெரிய தக்காளி
3. தேங்காய்
4. பச்சை மிளகாய்
5. கிராம்பு
6. நறுக்கிய உருளைக் கிழங்கு
7. மல்டிபர்பஸ் கறிமசாலா பொடி
8. பட்டை
9. கருவேப்பிலை
10. இஞ்சி, பூண்டு விழுது
11. பெரிய வெங்காயம்
12. மிளகாய்த் தூள்
13. எண்ணெய்
14. ஏலக்காய்
15. மல்லி இலை
16. உப்பு
செய்முறை
1. முதலில் கறியை நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்..
2. இப்போது அதில் மசாலா பொடி, இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு நறுக்கிய தக்காளி சேர்த்து பிரட்டி வைக்கவும்.
3. குக்கரில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
4. இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை போடவும். பின்னர் அதனை நன்கு நன்கு வதக்க வேண்டும்..
5. வெங்காயம் நன்கு வதங்கிய மாத்திரத்தில் மிளகாய்த் தூளை போட வேண்டும்..
6. இப்போது மீண்டும் கருவேப்பிலை போட்டு அது நன்கு வெடித்த மாத்திரத்தில் தக்காளியையும் போட்டு வதக்கி விட வேண்டும்..
7. பின்னர் மேற்கண்டவற்றுடன் நீங்கள் முன்பு புரட்டி வைத்து இருக்கும் கறியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்..
8. இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்கவும்.
9. இரண்டு விசில் வந்த மாத்திரத்தில் இறக்கி வைக்க வேண்டும்..
10. இப்போது பிரஷர் குறையும் வரையில் காத்திருந்து பிரஷர் குறைந்த மாத்திரத்தில் மெல்லத் திறந்து அரைத்த தேங்காய் விழுது, நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து மூடி மீண்டும் ஒரு விசில் வரும் வரையில் அடுப்பில் வைக்க வேண்டும்..
11. அதன் பின்னர் இறக்கி வைத்து, குக்கரின் பிரஷர் இறங்கிய பிறகு மூடியை திறந்து மல்லித் தழையை தூவி பரிமாறவும்.
மட்டனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள சத்துக்கள் நீரழிவு நீய் ஏற்படுவதை தடுக்கும்..நிறைய பேர் மட்டன் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மட்டன் ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். ஏனெனில் மட்டனில் புரோட்டீன்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அதனால் உடல் எடை குறையவும் இது உதவுகிறது..



Click it and Unblock the Notifications
