Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு தேவையான எள்ளு சாதம்.. வாரம் ஒருமுறை செஞ்சு கொடுங்க.. வலிமையாக இருப்பார்கள்...!
எள் சாதம் சாப்பிட்டு இருக்கீங்களா? கன்னி பெண்கள் எள் சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.. அதிலும் மாதவிடாய் காலங்களில் எள் சாதம் சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். அந்த நேரங்களில் ஏற்படும் இடுப்பு வலி, கை , கால் வலிகள் நீங்கும்..
கிராமங்களில் இன்றும் மாதவிடாய் நேரத்தில் சிறுமிகளுக்கு எள் எண்ணெய்யை பச்சையாக அப்படியே குடிக்க கொடுப்பார்கள்.. காரணம் அது பெண் குழந்தைகளுக்கு இடுப்புக்கு வழுவை கொடுக்கும்.. அந்த எள் சாதத்தை வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

எள்ளின் நன்மைகள்
எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று வகைகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர்.
எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
தேவையான பொருள்கள்
1. எள்
2. உளுத்தம் பருப்பு
3. காய்ந்த மிளகாய்
4. உப்பு
5. பெருங்காயம்
செய்முறை
1. முதலில் எண்ணெய்யை ஊற்றாமல் வாணலியில் எள்ளை மட்டும் நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
2. பிறகு அதே வாணலியை பயன்படுத்தி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை எல்லாம் தீய விடாமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்..
3. பின்னர் இந்த அனைத்து சாமான்களையும் மிக்சியில் வைத்து உடன் உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
4. பின்னர் இதனுடன் சேர்த்து முன்பு வறுத்த எள்ளையும் வைத்து நன்றாகக் பொடியாக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. இப்போது இந்தப் பொடியை தான் எள் சாதம் செய்ய பயன்படுத்த இருக்கிறோம்.
கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.



Click it and Unblock the Notifications