Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மதுரை கையேந்தி பவன் ஸ்பெஷல் தண்ணி சட்னி - சிம்பிளா 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Madurai Kaiyendi Bhavan Special Chutney Recipes In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு சட்டென்று ஒரு இரண்டு விதமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை கையேந்தி பவன் ஸ்பெஷல் தண்ணி சட்னி ரெசிபிக்களை ட்ரை செய்து பாருங்கள்.
இந்த சட்னிக்கள் இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடனும் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த இரண்டு சட்னிக்களை வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கும் போது செய்தால், பாராட்டு மழையில் நனையலாம். அந்த அளவில் ருசியாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு மதுரை கையேந்தி பவன் ஸ்பெஷல் தண்ணி சட்னி ரெசிபிக்கள் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை கையேந்தி பவன் ஸ்பெஷல் தண்ணி சட்னி ரெசிபிக்களின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தண்ணி தேங்காய் சட்னிக்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1 கப்
* சின்ன வெங்காயம் - 3
* பூண்டு - 5 பல்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பச்சை மிளகாய் - 8
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2 (விதைகளை நீக்கியது)
தண்ணி கார சட்னிக்கு..
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 10
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
* முதலில் மதுரை தண்ணி சட்னிக்கு மிக்சர் ஜாரில் தேங்காய்,
பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், பூண்டு, புளி, பச்சை மிளகாய், கல்
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தண்ணி
சட்னி என்பதால், நீரை சற்று தாராளமாக ஊற்ற வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,
வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை நன்கு பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின் வதக்கியதை தேங்காய் தண்ணி சட்னியுடன் சேர்த்து கலந்தால், மதுரை
கையேந்தி பவன் தண்ணி தேங்காய் சட்னி தயார்.
* அடுத்து தண்ணி கார சட்னிக்கு, மிக்சர் ஜாரில் 1/2 கப் துருவிய
தேங்காய், 10 பல் பூண்டு, 10 வரமிளகாய், சிறிது புளி மற்றும் 1
டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஊற்றி கிளறி, தண்ணி சட்னிக்கு தேவையான அளவு
நீரை ஊற்றி கலந்து, 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
மதுரை கையேந்தி பவன் கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
