Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உங்க குழந்தைக்கு செட்டிநாடு ஸ்டைலில் கோழி ரசம் செஞ்சு கொடுங்க.. சளி, இருமல் வரவே வராது..!
குழந்தைகளின் உடலுக்கு அதிக புரதச் சத்தை தருகிரது செட்டிநாடு கோழி ரசம்.. அதனால் குழந்தைகளுக்கு இந்த ரசத்தை வாரம் ஒருமுறையாவது செய்து கொடுங்கள்..அதிலும் இனி வரும் காலம் தொடர்ந்து மழை மற்றும் பனி பொழியும் காலமாக இருக்கும்.. அதனால் இந்த ரசம் குழந்தைகளுக்கு சளி , இருமல் மற்றும் காய்ச்சல் வராமல் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்..
தென் மாவட்டங்களில் இன்றும் இது போல கோழி ரசம் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை அனைவரும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அதிலும் செட்டிநாடு ஸ்டைலில் செய்தால் செம்மையாக இருக்கும்.. குழந்தைகள் மிச்சம் வைக்காமல் முழுவதுமாக சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.. வாங்க அதை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் ..

தேவையான பொருள்கள்
1. சிக்கன்
2. பட்டை
3. புளி
4. தனியாத் தூள்
5. மிளகாய்த் தூள்
6. மஞ்சள் தூள்
7. வெந்தயம்
8. மிளகுத்தூள்
9. பச்சை மிளகாய்
10. இலவங்கம்
11. ஏலக்காய்
12. இஞ்சி, பூண்டு விழுது
13. வெங்காய விழுது
14. தக்காளி
15. கருவேப்பிலை
16. உப்பு
17. எண்ணெய்
செய்முறை
1. சிக்கனை முதலில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்..
2. இப்போது சுத்தம் செய்த சிக்கனை துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்..
3. மறுபுறம் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, லவங்கம் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்..
5. பின்னர் கீறிய பச்சை மிளகாய், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, தேவையான அளவு கருவேப்பில்லை ஆகிய இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நன்கு வதக்கவும்.
6. இப்போது தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவற்றுடன் சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்..
7. சிக்கன் நன்கு வதங்கிய மாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விட வேண்டும்..
8. சிக்கன் வெந்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் புளியைக் கரைத்து மண் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்..
9. சிக்கன் வெந்ததும் புளித் தண்ணீரை அதில் ஊற்றி சிறிது நேரம் அப்படியே அடுப்பில் வைக்கவும்.
10. பின்னர் சிக்கனை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து விடவும்.
11. நீங்கள் பரிமாறும் சமயத்தில் சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டுப் பரிமாறவும்.
12. இதோ சுவையான செட்டிநாடு கோழி ரசம் தயார். கண்டிப்பாக வீட்டில் இதை ட்ரை பண்ணுங்கள்.. உங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்..



Click it and Unblock the Notifications