Latest Updates
-
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
Coriander Storage Tips In Tamil: இந்திய உணவுகளில் நல்ல மணத்திற்காகவும், சுவைக்காகவும் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, சட்னி என்று பலவற்றில் சேர்க்கப்படும் ஒரு நறுமணமிக்க மூலிகை தான் கொத்தமல்லி. ஆனால் சமையலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கொத்தமல்லியை வாங்கினால், சில நாட்களிலேயே அது வாடி, நிறமாறி, அழுகவும் தொடங்கிவிடுகிறது. இதனால் அடிக்கடி இந்த கொத்தமல்லியை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இருப்பினும் கொத்தமல்லியை சரியான முறையில் ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்றி சேமித்தால், வழக்கத்தை விட நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும். அதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் கொத்தமல்லியை சேமிக்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை தவறாமல் பின்பற்றினாலே வாரக்கணக்கில் கொத்தமல்லியை பிரஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம். இப்போது அந்த ட்ரிக்ஸ்களைக் காண்போம்.
ட்ரிக்ஸ் #1
கொத்தமல்லி ஒரு வாரம் வரை பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்படியானால் கொத்தமல்லி கட்டை வாங்கும் போது நன்கு பிரஷ்ஷாக பார்த்து வாங்க வேண்டும். பின் அதை வீட்டிற்கு கொண்டு வந்ததும், அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் முன்பு, அதில் உள்ள அழுகிய இலை மற்றும் தண்டுகள், நிறமாறிய இலைகள், வேர்ப்பகுதி போன்றவற்றை அகற்றிவிட வேண்டும். மேலும் கொத்தமல்லி ஈரமாக இருந்தால், அதை ஒரு துணியில் போட்டு உலர வைத்து, பின் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.
ட்ரிக்ஸ் #2
இரண்டாவது ட்ரிக்ஸ், கொத்தமல்லியை புதிய பூக்களைப் போன்று சேமிப்பது. இந்த முறையில் கொத்தமல்லி தண்டின் முனைகளை நீக்கிவிட்டு, ஒரு கண்ணாடி ஜாரில் கால்வாசி நீரை ஊற்றி, தண்டுகள் நீரைத் தொட்டவாறும், இலைகள் மேலே இருக்கும்படியும் வைக்க வேண்டும். பின் ஒரு கவர் கொண்டு அதை மூடி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். நீரின் நிறம் மாறத் தொடங்கும் போது, அதை மாற்ற வேண்டும்.
ட்ரிக்ஸ் #3
ஒரு வேளை உங்களுக்கு ஜார் ட்ரிக்ஸை பிடிக்காவிட்டால், ஒரு பேப்பர் டவலில் ஈரப்பதமில்லாத கொத்தமல்லியை வைத்து சுற்றி, ஒரு கவரில் போட்டு வையுங்கள். இப்படி வைக்கும் போது இந்த பேப்பர் டவல் கொத்தமல்லியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். பேப்பர் டவல் அதிக ஈரமாகிவிட்டால், அதை எடுத்துவிட்டு, மற்றொரு பேப்பர் டவலில் வைத்து சேமித்து வையுங்கள். இதன் மூலம் நீண்ட நாட்கள் கொத்தமல்லியை பிரஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம்.
ட்ரிக்ஸ் #4
கொத்தமல்லி நீண்ட நாட்கள் அழுகி போகாமல் இருக்க வேண்டுமானால், சேமித்து வைக்கும் போது நீரில் கழுவுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கொத்தமல்லியை கழுவினால், அதில் ஈரப்பதம் அதிகரித்து, அதன் அழுகும் தன்மை அதிகரித்துவிடும். ஒருவேளை கொத்தமல்லியில் மண் அதிகம் இருந்து கழுவ வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதை நன்கு உலர்த்திய பின் பேப்பர் டவலில் வைத்து மடித்து கவரில் போட்டு சேமித்து வையுங்கள்.
ட்ரிக்ஸ் #5
என்ன தான் சரியாக கொத்தமல்லியை சேமித்து வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது பழையதாகத் தொடங்குவதை தவிர்க்க முடியாது. அதுவும் சரியான முறையில் சேமித்து வைத்தாலும், அவ்வப்போது அதை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் அழுகிய அல்லது பழுத்த இலைகள் ஒன்று இருந்தாலும், அது மற்ற இலைகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் பாழாகச் செய்துவிடும்.
சரியான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றின் கலவையே கொத்தமல்லியை நீண்ட காலம் பிரஷ்ஷாக இருக்க உதவும். எனவே இதை புரிந்து கொத்தமல்லியை சேமித்து வையுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
