Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சப்பாத்திக்கு இப்படி குருமா செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Hotel Style Veg Kurma Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சுவையான குருமாவை செய்து கொடுக்க கேட்கிறார்களா? வீட்டில் காய்கறிகள் நிறைய உள்ளதா?
அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் வெஜ் குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது வித்தியாசமான சுவையிலும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவைஎப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பீன்ஸ் - 1/2 கப்
* கேரட் - 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 1 கப்
* காலிஃப்ளவர் - 1 கப்
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 10
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* பட்டை - 1 துண்டு
* கசகசா - 2 டீஸ்பூன்
குருமாவிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
* காய்ச்சிய பால் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் வைக்கக்கூடிய அளவிலான ஒரு பாத்திரத்தில்
நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் போட்டு, அதில் சிறிது உப்பு தூவி,
லேசாக நீரைத் தெளித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நீரை ஊற்றி,
ஒரு ஸ்டேண்ட்டை வைத்து, அதன் மேல் இந்த காய்கறி பாத்திரத்தை வைத்து,
குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, காய்கறிகளை வெளியே எடுத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், ஏலக்காய், கிராம்பு, பட்டை, கசகசா
ஆகியவற்றை சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
மிதமான தீயில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் தயிரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக சிறிது காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி, 1 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications