Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் ஹோட்டல் ஸ்டைல் ரெட் சட்னி.. எப்படி செய்யணும் தெரியுமா?
Hotel Style Red Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் காலை உணவாக இருக்குமா? தினமும் இதற்கு என்ன சட்னி அரைப்பதென்று யோசிப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இன்னும் என்ன சட்னி செய்வதென்று முடிவெடுக்கவில்லையா?
அப்படியானால் ஹோட்டல் ஸ்டைல் ரெட் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அட்டகாசமான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால் 2 இட்லி சாப்பிடும் உங்கள் பிள்ளைகளும் 1 இட்லியை எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் ரெட் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் ரெட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 12 பல்
* புளி - சிறிய அளவு
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 8
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* தேங்காய் - 1 பெரிய சில்லு (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, புளி சேர்த்து
நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வெங்காயம் நன்கு
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பெருங்காயத் தூள், மல்லி, புதினா சேர்த்து 20 நொடிகள்
வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தேங்காய் மற்றும் தக்காளியை சேர்த்து, தக்காளி
நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்து கிளறினால், சுவையான
ஹோட்டல் ஸ்டைல் ரெட் சட்னி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications