Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
இட்லிக்கு மல்லி சட்னியை ஒருடைம் இந்த ஸ்டைலில் அரைச்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Hotel Style Malli Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு நல்ல அருமையான சட்னி செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் உள்ளோருக்கு மல்லி சட்னி என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த மல்லி சட்னியை செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று மல்லி சட்னியை செய்யாமல், ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சுவையில் ஒருமுறை வீட்டில் செய்யுங்கள். இந்த ஹோட்டல் ஸ்டைல் மல்லி சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அருமையான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் மல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* வெங்காயம் - 2
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* தேங்காய் - 1/4 முடி (பொடியாக நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கைப்பிடி கொத்தமல்லியை நீரில் கழுவி விட்டு
சேர்த்து, சுருங்கும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய் துண்டுகளை போட்டு ஒருமுறை அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை, வதக்கிய வெங்காயம், மல்லி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஹோட்டல்
ஸ்டைல் மல்லி சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
